7 ஆம் வகுப்பு தமிழ் (இயல் – 1) / தேர்வு – 1
1. “அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழின் குரலாகும்” என்று பாடியவர்
A. பாரதிதாசன்
B. ராமலிங்கனார்
C. தாராபாரதி
D. வாணிதாசன்
2. “ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல, ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ் நாட்டில்” என்ற பாடலை பாடியவர் யார்
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B. உடுமலை நாராயணகவி
C. பெருஞ்சித்திரனார்
D. நாமக்கல் கவிஞர்
3. “எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில் திரிபும் தததமில் சிறிது உளவாகும்” என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல்
A. தொல்காப்பியம்
B. நன்னூல
C. பதிற்றுப்பத்து
D. பரிபாடல்
4. மொழியை உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்று கூறியவர் யார்
A. திருவள்ளுவர்
B. தொல்காப்பியர்
C. வீரமாமுனிவர்
D. பெரியார்
5. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத்துணிந்தவன் யார்
A. பேகன்
B. வேள்பாரி
C. அதியன்
D. குமண வள்ளல்
6. அன்பும் அறமும் ஆகிடும், அச்சம் என்பதை போக்கிடும் என்று பாடியவர் யார்
A. பாரதிதாசன்
B. ராமலிங்கனார்
C. தாராபாரதி
D. வாணிதாசன்
7. தமிழ் அறிஞர், கவிஞர் & விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத் தன்மை கொண்டவர் யார்
A. பாரதிதாசன்
B. ராமலிங்கனார்
C. தாராபாரதி
D. வாணிதாசன்
8. காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் யார்
A. பாரதிதாசன்
B. ராமலிங்கனார்
C. தாராபாரதி
D. வாணிதாசன்
9. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் யார்
A. நாமக்கல் கவிஞர்
B. பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D. வாணிதாசன்
10. மலைக்கள்ளன் என்ற நூலை எழுதியவர் யார்
A. நாமக்கல் கவிஞர்
B. பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D. வாணிதாசன்
11. சங்கொலி என்ற நூலை எழுதியவர் யார்
A. சுரதா
B. தாராபாரதி
C. வாணிதாசன்
D. நாமக்கல் கவிஞர்
12. நெறி என்ற சொல்லின் பொருள்
A. வலி
B. வழி
C. குறிக்கோள்
D. கொள்கை
13. முல்லைக்கு தேர் கொடுத்தவன் யார்
A. பேகன்
B. வேள்பாரி
C. அதியன்
D. குமண வள்ளல்
14. ஒப்புமை என்ற சொல்லின் பொருள்
A. இணை
B. மேகம்
C. வள்ளல்
D. நட்பு
15. முகில் என்ற சொல்லின் பொருள்
A. இணை
B. மேகம்
C. வள்ளல்
D. நட்பு
16. பகைவரை வென்றதை பாடுவது
A. கலம்பகம்
B. பரணி
C. எட்டுத்தொகை
D. பத்துப்பாட்டு
17. வான் புகழ் கொண்ட நூல் என்று அழைக்கப்படுவது
A. திருவாசகம்
B. திருக்குறள்
C. திருமந்திரம்
D. அனைத்தும் சரி
18. “கொல்லா விரதம் குறியாக கொள்கை பொய்யா நெறியாக” என்று பாடியவர் யார்
A. பாரதிதாசன்
B. ராமலிங்கனார்
C. தாராபாரதி
D. வாணிதாசன்
19. பகுத்தறிவு கவிராயர் என்று அழைக்கப்பட்டவர் யார்
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B. உடுமலை நாராயணகவி
C. பெருஞ்சித்திரனார்
D. நாமக்கல் கவிஞர்
20. மொழியின் இரண்டாம் நிலை என்று அழைக்கப்படுவது
A. கேட்பது
B. எழுதுவது
C. படிப்பது
D. B & C
21. தனது பாடல்கள் மூலம் பகுத்தறிவு கருத்துக்களை பரப்பியவர் யார்
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B. உடுமலை நாராயணகவி
C. பெருஞ்சித்திரனார்
D. நாமக்கல் கவிஞர்
22. தனது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டது
A. மொழி
B. சாதி
C. மதம்
D. அகிம்சை
23. தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும், நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர் யார்
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B. உடுமலை நாராயணகவி
C. பெருஞ்சித்திரனார்
D. நாமக்கல் கவிஞர்
24. மொழியின் முதல் நிலை என்று அழைக்கப்படுவது
A. பேசுவது
B. கேட்பது
C. படிப்பது
D. A & B
25. நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர் யார்
A. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B. உடுமலை நாராயணகவி
C. பெருஞ்சித்திரனார்
D. நாமக்கல் கவிஞர்
26. தமிழ் மொழியில் ________ வடிவங்கள் பயன்பாட்டில் உள்ளன
A. 3
B. 2
C. 4
D. 6
27. மொழியின் உயிர்நாடியாக விளங்குவது
A. பேச்சு மொழி
B. எழுத்து மொழி
C. இசைப்பாடல்
D. ஒலி
28. பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி. எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து கருதப்படும் மொழியாகும். இவையேயன்றி வேறு வகை மொழிகளும் உண்டு, எண்ணப்படுவது, இணைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே என்று கூறியவர் யார்
A. பாரதியார்
B. முவரதராசனா.ர்
C. திரு.வி. கல்யாண சுந்தரனார்
D. உ.வே. சாமிநாத ஐயர்
29. உபகாரி என்ற சொல்லின் பொருள்
A. இணை
B. மேகம்
C. வள்ளல்
D. நட்பு
30. மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்கள் என்னவென்று அழைக்கப்படுகிறது
A. பேச்சு மொழி
B. எழுத்து மொழி
C. வட்டார மொழி
D. அனைத்தும் தவறு
31. இவற்றில் திராவிட மொழி எது
A. கன்னடம்
B. தெலுங்கு
C. மலையாளம்
D. அனைத்தும் சரி
32. ஒரு மொழியானது நீண்ட காலம் நிலை பெறுவதற்கு எது இன்றியமையாதது
A. பேச்சு மொழி
B. எழுத்து வடிவம்
C. கல்வெட்டுகள்
D. கவிதைகள்
33. உலக வழக்கு என்று அழைக்கப்படுவது
A. பேச்சு மொழி
B. எழுத்து மொழி
C. கவிதை மொழி
D. இசை பாடல்கள்
34. இலக்கிய வழக்கு என்று அழைக்கப்படுவது
A. பேச்சு மொழி
B. எழுத்து மொழி
C. கவிதை மொழி
D. இசை பாடல்கள்
35. பேச்சு மொழியில் உணர்ச்சிக் கூறுகள் அதிகமாக இருக்கும். எழுத்து மொழியில் உணர்ச்சிக் கூறுகள் குறைவு. இந்த கூற்று சரியா, தவறா ?
A. சரி
B. தவறு
36. பேச்சு மொழிக்கும், எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அது என்னவென்று அழைக்கப்படுகிறது
A. இடைநிலை மொழி
B. இரட்டை வழக்கு மொழி
C. ஒற்றை வழக்கு மொழி
D. வட்டார மொழி
37. என் கதை என்ற நூலை எழுதியவர் யார்
A. நாமக்கல் கவிஞர்
B. பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D. வாணிதாசன்
38. _____________ என்னும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்கு தாய் மொழி அறிமுகமாகிறது
A. கேட்டல்
B. பேசுதல்
C. படித்தல்
D. A & B
39. இரட்டை வழக்கு மொழி என்று அழைக்கப்படுவது
A. தமிழ்
B. தெலுங்கு
C. கன்னடம்
D. பஞ்சாபி
40. எளிய நடையில் தமிழ் நூல்கள் எழுதிடவும் வேண்டும், இலக்கண நூல்கள் புதிதாக இயற்றுதல் வேண்டும் என்று பாடியவர் யார்
A. மகாகவி பாரதியார்
B. பாவேந்தர் பாரதிதாசன்
C. பெருஞ்சித்திரனார்
D. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
41. ஒலியின் வரி வடிவம் என்னவென்று அழைக்கப்படுகிறது
A. பேச்சு
B. எழுத்து
C. குரல்
D. பாட்டு
42. _____________ தமிழின் கிளை மொழிகளில் ஒன்று
A. உருது
B. ஹிந்தி
C. ஆங்கிலம்
D. தெலுங்கு
43. __________ என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டார பேச்சு வழக்கில் வழங்கி வருகிறது
A. குறும்பா
B. சொலவடைகள்
C. ஹைக்கூ
D. அனைத்தும் சரி
44. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
A. 5
B. 6
C. 7
D. 8
45. தமிழில் உள்ள முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை
A. 30
B. 20
C. 25
D. 32
46. காசு, எஃகு, பயிறு, பாட்டு, பந்து & சால்பு ஆகிய சொற்கள்
A. குற்றியலுகரம்
B. முற்றியலுகரம்
C. குற்றியலிகரம்
D. ஔகாரக் குறுக்கம்
47. தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள்
A. குற்றியலிகரம்
B. ஔகாரக் குறுக்கம்
C. குற்றியலுகரம்
D. முற்றியலுகரம்
48. புகு, பசு, விடு, அது, மாவு, வறு, ஏழு ஆகிய சொற்கள்
A. குற்றியலிகரம்
B. ஔகாரக் குறுக்கம்
C. முற்றியலுகரம்
D. குற்றியலுகரம்
49. தமிழ் எழுத்துக்களை குறிப்பிடுவதற்கு எந்த வசைச்சொற்களை பயன்படுத்துகிறோம்
A. கரம்
B. கான்
C. காரம் & கேனம்
D. அனைத்தும் சரி
50. குறில் எழுத்துகளை குறிக்க எந்த சொல்லை நாம் பயன்படுத்துகிறோம்
A. கரம்
B. கான்
C. காரம்
D. கேனம்
tosend answerkey